Sunday, 16 February 2014

நாடார்கள் எப்படி ”சமூகநீதி “ பெற்றார்கள்?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடார் ஜாதியும் கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட ஜாதி தான்.. கோவிலுக்குள் விட மாட்டார்கள்.. தலையில் துண்டு கட்ட அனுமதியில்லை. செருப்பு போட அனுமதி இல்லை. சில தெருக்களில், ஏன், நீர் நிலைகளில் கூட அனுமதி மறுக்கப்பட்டது அவர்களுக்கு. அவ்வளவு ஏன், நாடார் குல பெண்கள் தங்களின் மார்பை கூட மறைக்க முடியாது. அவ்வளவு தூரம் ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறை. ஆனால் இன்று அவர்கள் வளர்ந்து வந்திருக்கும் நிலை ஊர் அறிந்த விசயம். எப்படி இந்த வளர்ச்சி?

ஒவ்வொரு ஊரிலும் சிறு குழுவாக ஒன்றிணைந்தார்கள். ஒற்றுமையாக உழைத்தார்கள். தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை அந்த குழுவிற்கு கொடுத்தார்கள். அதை மகமை பண்டு என்றார்கள். தொழில் தொடங்கினார்கள். அந்த தொழிலுக்கு பண உதவி தேவையென்றால் மகமை பண்டில் இருந்து கொடுத்து உதவினார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சமூகம் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட ஆரம்பித்தது. பொருளாதாரம் முன்னேறும் போது அங்கீகாரமும் வந்து தானே ஆக வேண்டும்? சமுதாயத்தில் ஒதுக்கியன் எல்லாம் ஒன்றாக சேர ஆரம்பித்தான்.

எந்த கோவிலுக்குள் எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டதோ அந்த கோயில்களுக்கெல்லாம் மகமை பண்டுவில் இருந்து பணத்தை வாரி இறைத்தார்கள். கோயில் கதவுகள் திறந்தன. ஒரு காலத்தில் திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட அதே நாடார் ஜாதி தான் இன்று அந்த கோயிலில் பல முக்கிய பொறுப்பை வகிக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடங்க மறு, அத்து மீறு, திரும்ப அடி என்று அவர்கள் பிறர் மீது துவேசத்தை வளர்க்கவில்லை. சமுதாய அங்கீகாரம் பெற, யார் வீட்டு பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடவில்லை. மேடை மேடையாக ஏறி “நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்” என்று புலம்பவில்லை. வன்முறையை தூண்டவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் உணர்ந்திருந்தார்கள். பொருளாதாரா வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சி என்பது தான் அது. அமைதியாக, ’தான் முன்னேற என்ன வழி?’ என்பதை நோக்கி ஓடினார்கள். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்.

இன்று தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக இருப்பவர்கள், பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லாமல், ஜாதி அரசியல் வியாபாரிகளின் பேச்சை கேட்டு இன்னமும் வன்முறைத்தனமாக பேசிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும் இருந்தால், எத்தனை காலமானாலும் நீங்கள் மேலே வரவே முடியாது. ஒற்றுமையாக பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் தன்னால் கிடைக்கும்.. அதற்கான கண்கண்ட சாட்சி தான் நான் மேல் சொன்ன ஜாதியினரின் வளர்ச்சியும் அங்கீகாரமும்..

2 comments:

Anonymous said...

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.

நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப்பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.

முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர்.கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேரி நாடார் சமுதாயத்தினரும்,கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான்.
பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார்,நாயர்,ஈழவர்,பரவர்,முக்குவர்,புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது.

''நாடான்'' என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர்.நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உரிமை இருந்தது.

நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேறி நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்தனர்.நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்திற்க்கு நிலக்கிழார் நாடார்களும் எதிர்ப்பு தெருவித்தனர்.

நம்பூதிரி பிராமணன், நாடார் உட்பிரிவில் நிலமைக்காரர் நாடார், அதுபோல நாயரில் ஒரு பிரிவினர் இவர்களுக்கு மட்டுமே மேலாடை அணியும் உரிமை இருந்தது. வேறு எந்த சாதியினருக்கும் உரிமை கிடையாது. பனையேறி நாடார் பெண்களே முதலில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடினர்.வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நடந்தது ஆனால் நீங்கள்.....தேவை இல்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்

Ajay Kumar said...

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.

நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப்பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.

முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர்.கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேரி நாடார் சமுதாயத்தினரும்,கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான்.
பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார்,நாயர்,ஈழவர்,பரவர்,முக்குவர்,புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது.

''நாடான்'' என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர்.நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உரிமை இருந்தது.

தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேறி நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்தனர்.நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்திற்க்கு நிலக்கிழார் நாடார்களும் எதிர்ப்பு தெருவித்தனர்.